நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் திரிஷ்யம் 2 என்கிற பெயரில் வெளியாகி முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தென்னிந்திய மொழிகள் தாண்டி ஹிந்தியிலும் இந்த படத்தின் இரண்டு பாகங்களும் ரீமேக் செய்யப்பட்டன.
இந்த நிலையில் தற்போது திரிஷ்யம் 3 படம் மலையாளத்தில் உருவாகியுள்ளது. வரும் மே 21 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ 13 பிளஸ் (UA 13+) சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 35 நிமிடம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. திரிஷ்யம் படம் இந்த மூன்றாம் பாகத்துடன் நிறைவு பெறுவதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.