மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

இந்திய சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக எண்பது வருடங்கள் இசைப் பயணம் மேற்கொண்ட ஆஷா போஸ்லே தனது 92வது வயதில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். நாடெங்கிலும் இருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் அவர் பாடியுள்ளார். அதே சமயம் மலையாளத்தில் அவர் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாடி உள்ளார் என்பது ஆச்சரியமான தகவல்.
1977ல் மலையாளத்தில் வெளியான சுஜாதா என்கிற படத்தில் இடம்பெற்ற சுயம்வர சுபதின மங்களங்கள் என்கிற பாடலை ஆஷா போஸ்லே பாடியுள்ளார். இந்தப் பாடலை அவருடன் இணைந்து பாடியவர் கே.ஜே யேசுதாஸ். சொல்ல போனால் ஆஷா போஸ்லேவை மலையாளத்திற்கு அழைத்து வந்த பெருமை கே.ஜே யேசுதாஸையே சேரும்.
காரணம் அப்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆன இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் என்பவரை இந்த சுஜாதா படத்திற்கு இசையமைக்க சிபாரிசு செய்தார் யேசுதாஸ். அந்த ரவீந்திர ஜெயில் தான் இந்த படத்தில் ஆஷா போஸ்லே ஒரு பாடல் பாடினால் நன்றாக இருக்கும் என்று கூறி அவரை மலையாளத்திற்கு அழைத்து வந்தார். அவரை ஒப்பந்தம் செய்வதற்காக படத்தின் தயாரிப்பாளரும் அந்த பாடலை எழுதிய பிரபலமான பாடலாசிரியரான மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் என்பவரும் மும்பைக்கு சென்று பாடல் குறித்து விளக்கி சொல்லி அவரை ஒப்புக்கொள்ள செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.