2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
தனுஷ் நடித்த சீடன் படம் மூலமாக தமிழில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தொடர்ந்து அனுஷ்காவுடன் நடித்த பாகமதி, சமீபத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த யசோதா உள்ளிட்ட படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர். இந்தநிலையில் மலையாளத்தில் அவர் நடித்திருந்த மாளிகைபுரம் என்கிற படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சுவாமி ஐயப்பனையும் அவருக்காக சன்னிதானத்தில் காத்திருக்கும் மாளிகைப்புரத்தம்மனையும் மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் ஐயப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் உன்னி முகுந்தன்.
இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது நன்றியை செலுத்துவதற்காக சபரிமலைக்கு சென்று வழிபட்டு வந்துள்ளார் உன்னி முகுந்தன். இது குறித்து அவர் கூறும்போது, “கடந்த வருடம் இதே ஜனவரி 14-ஆம் தேதி நான் நடித்த மேப்படியான் என்கிற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தை நான் தான் தயாரித்திருந்தேன். அதில் சுவாமி ஐயப்பன் பாடல் ஒன்றை பாடும் பாக்கியம் எனக்கு கிடைத்திருந்தது. இதோ இதே ஜனவரி 14 மாளிகைப்புரம் என்கிற படத்தின் வெற்றியுடன் இங்கே நான் வந்திருக்கிறேன். இந்த படத்தில் சுவாமி ஐயப்பனாகவே நடிக்கும் மிகப்பெரிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. இதுபோன்று அடுத்தடுத்த வருடங்களில் இதே மகர ஜோதி தினத்தில் நான் இங்கே வரும்போது இதுபோன்று இன்னும் அடுத்தடுத்த முன்னேற்றங்களுடன் வரவேண்டுமென இறைவனை வேண்டிக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.