
வார்த்தைகள் புரியவில்லை... ஆனால் பாடல் மட்டும் ஹிட்
1. ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி பாடல்கள்
ஹாரிஸ் ஜெயராஜ் தனது பாடல்களில் ஒலி நயத்திற்காக எந்த மொழியையும் சேராத, பொருள் இல்லாத வார்த்தைகளைப் (Gibberish) பயன்படுத்துவதில் மிகவும் புகழ்பெற்றவர்.
"ஹஸிலி பிஸிலி..." (ஆதவன்)
"ஹசிலி பிஸிலியே..." என்ற தொடக்க வரிகளுக்கு எந்த மொழியிலும் பொருள் கிடையாது. வெறுமனே கேட்க இனிமையாக இருக்கும் ஒலி அமைப்பிற்காக உருவாக்கப்பட்டது. இதேப்போன்று சூர்யாவின் காக்க காக்க படத்தில் வரும் உயிரின் உயிரே பாடலில் வரும் ஓ மகா சீயா வாஹி யால வரிக்கும் என்ன அர்த்தம் என தெரியவில்லை. ஆனால் அந்த பாடலும் ஹிட்டாக அமைந்தது.
‛நாக்கமுக்க..." (காதலில் விழுந்தேன்)
விஜய் ஆண்டனியின் ஆரம்பகால பாடல்களில் வெளியான ‛நாக்கமுக்க..., என் உச்சி மண்டைல..., மஸ்காரா..., டைலாமோ டைலாமோ " போன்ற பாடல்களில் இடையில் வரும் வரிகளுக்கும் அர்த்தம் என்று எதுவும் இருக்காது. ஆனால் இந்த பாடல்கள் எல்லாம் அந்த சமயங்களில் வெளியாகி ஹிட் அடித்தன.
2. வடசென்னை "கானா" மற்றும் வட்டார வழக்கு பாடல்கள்
சென்னையின் உள்ளூர் வழக்கிலிருக்கும் சில கடுமையான சொற்கள், மற்ற தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடக்கத்தில் புரியாது.
"ஆலுமா டோலுமா..." (வேதாளம்)
"ஆலுமா", "டோலுமா" போன்றவை வட சென்னை பகுதி மக்களின் பேச்சு வழக்குச் சொற்கள். பலருக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் தியேட்டரையே கதறவிட்ட மாஸ் ஹிட்.
"டண்டனக்கா..." (ரோமியோ ஜூலியட்)
டி.ஆரின் ஸ்டைலை வைத்து எழுதப்பட்ட சென்னை பாஷைப் பாடல். "அல்வா துண்டு", "சில்லு வண்டு" போன்ற வேகமான சென்னை ஸ்லாங் வார்த்தைகள் அடங்கிய ஆட்டப் பாட்டு.
3. தங்கிலீஷ்
தமிழ் மற்றும் ஆங்கிலத்தை ஒன்றாகக் கலந்து, இலக்கண விதிகளை உடைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள்.
"ஒய் திஸ் கொலைவெறி டி" (3)
"ஒயிட் ஸ்கின்னு கேர்ளு, ஹார்ட்-டு பிளாக்-கு..." எனத் தவறான ஆங்கிலமும் எளிய தமிழும் கலந்த வரிகள். கவித்துவ அர்த்தம் இல்லை என்றாலும் தாளம் காரணமாக உலகளவில் வைரலானது.
"வாத்தி கமிங்..." (மாஸ்டர்)
பாடலில் "வாத்தி கமிங் ஒத்த சொலெட..." போன்ற வரிகள் மிகவும் வேகமாக வருவதால் சொற்களைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால் அனிருத்தின் பேஸ் (Bass) இசை உலகெங்கும் இதை ஆட வைத்தது.
4. அதிவேக "ராப்" வரிகள்
வேகமாகப் பாடும் ராப் பாடல்களில் என்ன வரிகள் வருகிறது என்பதை ஒரே முறையில் கேட்டுப் புரிந்துகொள்வது கடினம்.
"பேட்ட பராக்..." (பேட்ட)
இந்த பாடலில் அனிருத்தின் குரல் அதிவேகமாகச் செல்லும். வரிகள் புரிய சில முறை கேட்க வேண்டும், ஆனால் ரஜினியின் மாஸ் இமேஜுக்கு கச்சிதமாகப் பொருந்தி ஹிட் அடித்தது.
"தீ தளபதி..." (வாரிசு)
பின்னணியில் வரும் ராப் குரல்களும், தமனின் ஹெவி மெட்டல் இசையும் வரிகளை மறைத்துவிடும். இருப்பினும் பவர்புல்லான ட்யூன் பாடலைக் ஹிட் ஆக்கியது.
"அரபிக்குத்து - ஹலமிதி ஹபிபோ..." (பீஸ்ட்)
"ஹலமிதி ஹபிபோ" என்பது அரேபிய வார்த்தை போல சிவகார்த்திகேயனால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைச் சொல் (Dummy Words). மொழி புரியாத நிலையிலும் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!