
தியேட்டரில் தோல்வி... ஓடிடி, டிஜிட்டல் தளத்தில் கொண்டாடப்பட்ட படங்கள்
1. அன்பே சிவம்
தியேட்டர் வைப்: "என்னப்பா இது ரொம்ப தத்துவமாக இருக்கு..."னு அன்றைக்கு படம் ரிலீசான சமயத்தில் தியேட்டரே காலி பண்ணிட்டாங்க.
OTT / Digital "Comeback": இன்றைக்கு இருக்கும் நெட்டிசன்களுக்கு இது வெறும் படமில்லை, ஒரு "Emotion"! கமல்ஹாசன் - மாதவனின் காம்பினேஷன், அன்பைப் பற்றிய ஆழமான கருத்துக்கள்னு YouTube & OTT-ல் இன்றைக்கும் மீம் டெம்ப்ளேட்டாகவும், லைஃப் லெசனாகவும் டிரெண்ட் ஆயிட்டு இருக்கு.
2. ஹே ராம்
தியேட்டர் வைப்: அப்போது இருந்த ஆடியன்ஸுக்கு இந்த படத்தின் திரைக்கதையும், மேக்கிங்கும் புரியாமல் போனதால் "ப்ளாப்" ஆக்கினாங்க. தெரிந்த வரலாற்று கதையையே எத்தனை முறை பார்ப்பது என ஒதுக்கினார்கள்.
OTT / Digital "Comeback": ஆனால் இன்றைக்கு இருக்கும் Gen-Z சினிமா வெறியர்கள் இந்த படத்தின் கேமிரா வொர்க், டீடெய்லிங், இளையராஜாவின் பிஜிஎம்-ஐ பார்த்து மிரண்டு போறாங்க.
3. ஆரண்ய காண்டம்
தியேட்டர் வைப் : இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதே பாதி பேருக்கு தெரியாது.
OTT / Digital "Comeback": தமிழ் சினிமாவின் முதல் புதிய இருண்ட குற்றப்படம். தியாகராஜன் குமாரராஜாவின் இந்த படைப்பு, OTT தளங்களில் வந்த பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்களால் "கல்ட் கிளாசிக்" ஆகக் கொண்டாடப்பட்டது.
4. சில்லுக்கருப்பட்டி
தியேட்டர் வைப்: பெரிய ஸ்டார்ஸ் இல்லை என்ற காரணத்தால் தியேட்டரில் இந்த படம் ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது.
OTT "Comeback" (Netflix): ஓடிடியில ரிலீஸ் ஆன உடனே மன நிறைவு படம்னு Gen-Z கொண்டாடினார்கள். குறிப்பாக, வயதான பிறகும் வரும் அந்த காதலைக் காட்டும் எபிசோட்... நல்ல மேஜிக்.
5. ஆயிரத்தில் ஒருவன் (2010)
தியேட்டர் வைப் : அப்போது இருந்த மக்களுக்கு இந்த டார்க் பேண்டஸி (Dark Fantasy) கான்செப்ட் புரியவில்லை. "என்னடா ரத்தமும் சதையுமாக இருக்கு" என்று ப்ளாப் ஆக்கினார்கள்.
OTT / Digital Comeback: இன்றைக்கு இருக்கும் Gen-Z சினிமா விரும்பிகளுக்கு இது வெறும் படமில்லை. செல்வராகவனின் தலைசிறந்த படைப்பு, ஜீவி பிரகாஷின் பிஜிஎம், கார்த்தி - பார்த்திபன் கெமிஸ்ட்ரி, சோழர்களின் வரலாற்றுப் பின்னணி என்று இன்றைக்கும் வலைதளங்களில் இந்த படத்தை வைத்து பெரிய ஆராய்ச்சியே செய்து கொண்டு இருக்கிறார்கள். ரீ-ரிலீஸில் தியேட்டரில் ஹவுஸ்புல் ஆன படம். இந்த படத்தை பார்த்து விட்டு அடுத்த பாகம் எப்போது எடுப்பீர்கள் என செல்வராகவனை பலரும் கேட்க துவங்கி விட்டார்கள்.
6. மெஹந்தி சர்கஸ்
தியேட்டர் வைப்: எந்தவித பெரிய பப்ளிசிட்டியும் இல்லாமல் விமர்னம் மட்டும் நன்றாக வந்து தியேட்டரை விட்டு போனது.
OTT Comeback : ஷான் ரோல்டனின் (Sean Roldan) ஆன்மாவைத் தொடும் இசைக்காகவே இந்த படத்தை OTT-ல் Gen-Z தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஒரு சர்க்கஸ் பெண்ணிற்கும் இசைக்கடைக்காரருக்கும் இடையிலான இந்த பீல்-குட் காதல் கதை, இன்ஸ்டா ரீல்ஸ்களில் இன்றைக்கும் டிரெண்டிங்!




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!