
யு-டியூபர் இர்பானை பாட வைத்த ஜிப்ரான்
மார் 02, 2023
Advertisement
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான், யு-டியூபர் இர்பானை தனது இசையில் பாட வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜிப்ரான், இர்பானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "உங்களை பாட வைத்ததில் மகிழ்ச்சி. அடுத்தமுறை உங்களையும் என்னையும் போன்ற அனைத்து பிரியாணி ரசிகர்களுக்காகவும் ஒரு பிரியாணி பாடலை டெடிகேட் செய்வோம்" என்று பதிவிட்டுள்ளார். ஜிப்ரானின் இசையில் இர்பானை குரலை கேட்க இருவரது ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள செய்தியும் பலருக்கு ஆச்சரியத்தை தூண்டியுள்ளது. தற்போது இர்பான், ஜிப்ரானின் எந்த ஆல்பத்தில் பாடியுள்ளார் என்ற கேள்வியும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…