
இது டிம்பிள் வீடு : சூட்டிங் வீட்டின் நினைவுகளை பகிரும் நீலிமா
ஜூலை 04, 2024
Advertisement
சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி 7 வருடங்களுக்கு பின் வானத்தைப் போல என்ற தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் இப்போது காண்பிக்கப்படும் வீட்டில் தான் வாணி ராணி தொடரும் படமாக்கப்பட்டது. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள நீலிமா, "இதுதான் டிம்பிள் வீடு. நாங்கள் இந்த வீட்டில் சைக்கிள் ஓட்டி விளையாடி இருக்கிறோம். ஒன்றாக சுற்றி திரிந்திருக்கிறோம். இது சூட்டிங் வீடாக இருந்தாலும் இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலுக்கும் என்னுடன் தொடர்புண்டு. தூணில் சாய்ந்திருக்கிறேன். தரையில் அமர்ந்து அழுதிருக்கிறேன். இது போன்ற பல நினைவுகளை எனக்கு இந்த வீடு ரிவைண்டு செய்துள்ளது. இந்த வீட்டை பார்த்ததும் பல ஏக்கமான உணர்வுகள் எனக்குள் வருகிறது" என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!