
சிறகடிக்க ஆசை குழுவினருடன் பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா!
ஜூலை 06, 2024
Advertisement
தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான கே ஆர் விஜயா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‛சிறகடிக்க ஆசை" சீரியல் குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் அவர் அந்த சீரியலில் நடிக்கிறாரா என்றும் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இது தொடர்பாக அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், "மூத்த நடிகை கே ஆர் விஜயா இன்று நான் சிறுதும் எதிர்பாராத நேரத்தில் வருகை தந்தார். அவர்களை நேரில் சந்தித்த நிமிடம் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சீரியலின் கதாபாத்திரமான முத்து, சர்ப்ரைஸ் கொடுக்க இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் அவர் கே ஆர் விஜயாவை அழைத்து வருவது தான் சர்ப்ரைஸாக இருக்குமென ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!