
துப்பாக்கிகளுக்கு நடுவில் காவ்யா வர்ஷினி : ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரல்
டிச 30, 2023
Advertisement
பிரபல சின்னத்திரை நடிகையான காவ்யா வர்ஷினி பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் மிரட்டியிருக்கிறார். தவிர மேடை பாடகியாகவும் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது தனது இண்ஸ்டாகிராமில் ரத்தம் சொட்ட சொட்ட பயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், மற்றொரு புகைப்படத்தில் சுற்றிலும் துப்பாக்கி வைத்திருக்கும் கமேண்டோக்களுக்கு நடுவில் நிற்கும் புகைப்படத்தையும், மேலும் ஒரு புகைப்படத்தில் நடிகர் ஜெய் ஆகாஷூடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது ஜெய் ஆகாஷூடன் காவ்யா வர்ஷினி நடிக்கும் புது ப்ராஜெக்டின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பலரும் காவ்யா வர்ஷினியின் புது ப்ராஜெக்ட் வெற்றியடைய வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!