ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில்
மே 11, 2026
Advertisement
டொவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் பள்ளிச்சட்டம்பி திரைப்படம் வெளியான நிலையில், தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், "கிரேசியாஸ் எல் கிளாசிகோ" என்று வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கேம்ப் நவ் என்கிற கால்பந்து மைதானத்தில் வெளியிடப்பட்டுள்ளது.. அதற்குக் காரணமும் உண்டு.
இப்படத்தின் கதை கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள கால்பந்து கலாச்சாரத்தையும், உலகப்புகழ் பெற்ற ஸ்பானிஷ் கால்பந்து ரசிகர் ஒருவரின் மனநிலையையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ளதாம். மலையாள சினிமா வரலாற்றில் ஒரு சர்வதேச கால்பந்து மைதானத்தில் ஒரு படத்தின் டைட்டில் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். முஷின் பெராரி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இவர் கடந்த 2015-ல் வெளியான கே.எல் 10 என்கிற படத்தை இயக்கியவர். 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!