32 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலில் ரீ ரிலீஸாகும் தென்மாவின் கொம்பத்து
ஆக 29, 2026
Advertisement
மோகன்லால் நடித்த சந்திரோல்சவம் என்கிற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது என்கிற தகவலை சமீபத்தில் தான் வெளியிட்டிருந்தோம். அந்த சூடு ஆறுவதற்குள் மோகன்லாலின் இன்னொரு சூப்பர் ஹிட் படமான தென்மாவின் கொம்பத்து படமும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இது குறித்த புதிய டீசர் ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1994ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் தென்மாவின் கொம்பத்து படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் பின்னர் 1995ல் ரஜினிகாந்த், மீனா நடிப்பில் முத்து என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தமிழிலும் சூப்பர் ஹிட் ஆகியது. ரஜினிகாந்த்திற்கு ஜப்பானிலும் மிகப்பெரிய அறிமுகத்தை உருவாக்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!