படத்தின் ரிலீஸ் தேதியையே டைட்டிலாக்கிய இயக்குனர்
ஆக 21, 2026
Advertisement
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் அனில் ரவிபுடி. பகவந்த் கேசரி, சங்கராந்தி வஸ்துனம், மன ஷங்கர வர பிரசாத் காரு என பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்தவர். அனில் ரவிபுடி இயக்கும் புதிய படத்தில் வெங்கடேஷ், கீர்த்தி சுரேஷ், கிர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் ரிலீஸ் தேதியும், தலைப்பும் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது, படம் வெளியாகும் தேதி (அடுத்த ஆண்டு) ஜனவரி 12. படத்தின் தலைப்பு "ஜனவரி 12 விடுதல".
அதாவது படத்தின் ரிலீஸ் தேதியையே படத்தின் தலைப்பாகவும் வைத்துள்ளனர். இதுகுறித்து படக்குழு வெளியிட்ட வீடியோவில் இயக்குநர் அனிலிடம் நடிகர்கள் படத்திற்கு என்ன பெயர்? எனக் கேட்க , "ஜனவரி 12 விடுதல" என கூறுகிறார். இறுதியில், இதுதான் திரைப்படத்தின் பெயரும் என படக்குழுவினர் அறிவித்தனர். அடுத்தாண்டு சங்கராந்திக்கு இப்படம் வெளியாகவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!