சினிமாவுக்குள் எடுக்கப்பட்ட குறும்படத்தை யுடியூபில் வெளியிட்ட பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு
ஆக 31, 2026
Advertisement
மலையாளத்தில் கடந்த வாரம் நிவின்பாலி, மமிதா பைஜு நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. "பிரேமலு" இயக்குனர் கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இதில், நிவின்பாலியின் தம்பியாக ஜோயல் என்கிற கதாபாத்திரத்தில் "பிரேமலு" புகழ் சங்கீத் பிரதாப் நடித்திருந்தார். படத்தில் அவர் குறும்படம் இயக்குபவராகவும், அது தொடர்பான கலாட்டாக்கள் நடப்பது போலவும் அவ்வப்போது காட்சிகள் இடம்பெற்றன.
இந்த நிலையில், அப்படி படத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்ட அந்த "சோல்மேட்ஸ் - ஒரு சாத்துக்குடி பிரணயம்" என்கிற குறும்படத்திற்கு கூட டம்மியாக கதை எழுதாமல், அதற்கும் நிஜமாகவே ஒரு கதையை எழுதி அதையும் ஒரு குறும்படமாகவே படப்பிடிப்பு முடிவதற்குள் எடுத்துவிட்டார்கள்.
இந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ் இந்த 15 நிமிட குறும்படத்தை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பார்வையாளர்கள் இதைப் பார்த்து ரசித்துள்ளனர். இந்த குறும்படத்தில் நிவின்பாலியும் ஒரு சிறிய ரோலில் வந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!