ராக்கா படத்தில் இணைந்த தெலுங்கு நடிகை
ஜூலை 21, 2026
Advertisement
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கதாநாயகியாக ஆக் ஷன் வேடத்தில் தீபிகா படுகோனே நடித்து வரும் நிலையில் தற்போது, தெலுங்கு நடிகை ஸ்ரீ ஹனுமந்து இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது குறித்த தகவலை தயாரிப்பாளர் எஸ்கேஎன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியிருந்தாலும், படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பது குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. கடைசியாக சீதா பயணம் படத்தில் நடித்திருந்த இவர், அடுத்ததாக சென்னை லவ் ஸ்டோரி படத்திலும் நடித்துள்ளார். தற்போது அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஸ்ரீ ஹனுமந்து நடிக்கும் காட்சிகள் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
2027ம் ஆண்டின் இறுதியில் திரைக்கு வரும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசைய மைக்கிறார். ஆக்ஷன் மட்டுமல்லாமல், மறுபிறவி அறிவியல் புனைகதையில் உருவாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!