
படம் ஓடாவிட்டால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டை அடிப்பேன்: தெலுங்கு நடிகை சவால்
இந்த படத்தின் முன் வெளியீட்டு விழாவில் ஹீரோயினாக நடித்துள்ள ஸ்வேதா பேசியதாவது: நான் ரசிகர்களிடம் படத்தைப் பார்க்கும்படி கெஞ்சப் போவதில்லை, மாறாக அவர்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். தியேட்டருக்குள் சென்று இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒருவர் கூட ஏமாற்றமடைய மாட்டார்கள்.
அப்படி யாராவது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்ததாகக் கூறினால், நான் ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற அமீர்பேட்டை சென்டரில் நடுரோட்டில் அமர்ந்து கொண்டு என் தலையை முழுமையாக மொட்டை அடித்துக் கொள்கிறேன். என்று மிக ஆக்ரோஷமாகப் பேசினார்.
இந்த பேச்சு வைரல் ஆனதால் "படத்தின் மீது கொண்ட அதீத நம்பிக்கை காரணமாக உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசிவிட்டேன்". என்று கூறியிருக்கிறார் ஸ்வேதா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!