மகன் மற்றும் மகள் திருமணம் குறித்து சுசித்ரா மோகன்லால் வெளிப்படை கருத்து
ஆக 25, 2026
Advertisement
மலையாளத் திரையுலகில் இளம் முன்னணி நடிகர்களான பஹத் பாசில், நிவின் பாலி, வினீத் சீனிவாசன், துல்கர் சல்மான் என பலரும் திருமண வாழ்க்கையில் எப்போதோ நுழைந்து விட்டனர். அதேசமயம், மோகன்லாலின் 36 வயதான மகன் பிரணவ் மற்றும் 32 வயதான விஸ்மயா ஆகியோர் திருமணம் எப்போது என ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து இவர்களின் தாயும் மோகன்லாலின் மனைவியுமான சுசித்ரா மோகன்லால் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர். கூறும்போது, "திருமணம் என்பது முற்றிலும் அவர்களது விருப்பம். எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது அவர்கள் செய்து கொள்ளலாம். அதை நாங்கள் பார்க்க வேண்டும் என்றாலும் சரி, இல்லை அவர்களாகவே தேர்வு செய்து எங்களிடம் கூறினாலும் சரி. ஒருவேளை அவர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளவே விருப்பமில்லை என்றாலும் கூட பரவாயில்லை. அதை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். அவர்கள் எங்களுடன் வாழ்வதே எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிதான்" என்று கூறியுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!