மீண்டும் ரவிதேஜா ஜோடியானார் ஸ்ரீலீலா
ஜூன் 12, 2024
Advertisement
தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா. தற்போது பாலிவுட்டுக்கும் செல்கிறார். கடைசியாக மகேஷ் பாபு ஜோடியாக "குண்டூர் காரம்" படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு ரவி தேஜா நடிப்பில் வெளியான "டமாகா" படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார். இப்போது மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார்.
ரவி தேஜாவின் 75வது படமாக உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பானு போகவரபு இயக்குகிறார். "டமாகா" படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கின. படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையையொட்டி திரையரங்குளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!