பிரித்விராஜ், நிவின்பாலி 4வது நேரடி மோதல் : இம்முறையாவது பிரித்விராஜ் வெல்வாரா?
ஆக 14, 2026
Advertisement
மலையாளத்தில் வரும் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக பிரித்விராஜ் நடித்த கலிபா (ஆக-20) மற்றும் நிவின்பாலி நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் (ஆக-21) ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த போட்டியில் இடம் பெற்றிருந்த துல்கர் சல்மானின் ஐ ஆம் கேம், செப்-3க்கு தள்ளிப்போய் உள்ளது இதனால் பிரித்விராஜ், நிவின்பாலி படங்களுக்கு நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது
இதற்கு முன்பு மூன்று முறை இவர்களது படங்கள் நேரடியாக மோதியுள்ளன. அதில் 201 4ல் பிரித்திவிராஜின் லண்டன் பிரிட்ஜ் மற்றும் நிவின்பாலியின் 1983 படங்கள் வெளியாகின. அதையடுத்து 2017ல் பிரித்திவிராஜின் ஆடம் ஜான் மற்றும் நிவின்பாலியின் நண்டுகளுட நாட்டில் ஓரிடவேள படங்கள் வெளியாகின. மூன்றாவது முறையாக 2019ல் பிரித்விராஜின் பிரதர்ஸ் டே மற்றும் நிவின்பாலியின் லவ் ஆக் ஷன் டிராமா படங்கள் வெளியாகின.
இந்த மூன்று முறையுமே நிவின்பாலி தான் ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார். தற்போது நான்காவது முறையாக வரும் ஓணம் பண்டிகையில் மோதும் இவர்கள் படங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது, பிரித்திவிராஜ் இந்த வெற்றி விகிதத்தை மாற்றி அமைப்பாரா, அல்லது இருவருமே வெற்றி பெறுவார்களா என்பதை தெரிந்துகொள்ள இன்னும் ஒரு வாரம் பொறுத்து இருக்க வேண்டும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!