ஏஐ அல்ல : நிகிலா விமல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ஒளிப்பதிவாளர் விளக்கம்
ஜூலை 07, 2026
Advertisement
இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நஸ்ரியா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் "சூட்சும தர்ஷினி". இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் தயாரிப்பாளர்கள் தற்போது "தூமகேது" என்கிற படத்தை தயாரித்து வருகின்றனர். இதில் நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்க, "ஆவேசம்" புகழ் சஜின் கோபு மற்றும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். "நெய்மர்" படத்தை இயக்கிய சுதி மேடிசன் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பார்வை நேற்றுமுன்தினம் வெளியானது.
தண்ணீருக்கு அடியில் நிகிலா விமல் இருப்பது போலவும், அவரை சூழ்ந்து நிற்கும் மூன்று பேர் முகமூடி அணிந்து அவரை சுற்றி வளைத்துப் பிடித்து இழுப்பது போலவும் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. இதைப் பார்த்து பலரும் இது ஏஐ (AI)-இல் உருவாக்கப்பட்ட போஸ்டர் என்று கமெண்ட் அடித்தார்கள். ஆனால் இது ஏஐ (AI) அல்ல, நிஜமாகவே படமாக்கப்பட்ட காட்சி என்று, உடனடியாக படத்தின் ஒளிப்பதிவாளர் சைஜு காலித் இதற்காக எடுக்கப்பட்ட மேக்கிங் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதன்பிறகே ரசிகர்களுக்கு இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரிஜினல் தான் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!