தர்ம காரியங்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்படும் மோகன்லாலின் நரசிம்மம்
ஜூலை 18, 2026
Advertisement
மலையாளத்தில் 2000ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் "நரசிம்மம்". ஷாஜி கைலாஷ் இயக்கியிருந்தார். மோகன்லாலின் நண்பரான ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட "ஆசீர்வாத் சினிமாஸ்" மூலம் தயாரித்த முதல் படமும் இதுதான். சுமார் 1.1 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 22 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் முதல் 20 கோடி வசூலித்த படம் என்கிற பெயரைப் பெற்றது. அதன் பிறகு இந்தப் படம் தொலைக்காட்சிகளில் பலமுறை திரையிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் விரைவில் 4K முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யத் தயாராகி வருகிறது. இந்த ரீ-ரிலீஸ் குறித்து படத்தின் இயக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பாளரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். மலையாளிகள் அனைவரும் இந்தப் படத்தை ஏற்கனவே பலமுறை பார்த்துவிட்டதால், சாதாரண ரிலீஸ் இந்தப் படத்திற்குத் தேவையில்லை என்றும், மீண்டும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்வது கமர்சியல் லாபங்களுக்காக இல்லாமல் தர்ம காரியங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரிடம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதன்படி, கேன்சர் நோயாளிகள் போன்ற உதவி தேவைப்படுபவர்களுக்காக நிதி திரட்டும் வகையில், பிரீமியம் திரையரங்குகளில் பிரீமியம் டிக்கெட் விலையில் மட்டுமே இந்தப் படத்தை வெளியிடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதை பரிசீலிப்பதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!