அறிமுகப்படத்திலேயே ஆக்ஷனில் கலக்க தயாராகும் மோகன்லால் மகள்
ஜூலை 17, 2026
மலையாளத்தில் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துவிட்டு, அதன்பிறகு அவரது இயக்கத்திலேயே "ஆதி" என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் மகனுக்காக மோகன்லால் ஒரு கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், மோகன்லாலின் மகள் விஸ்மயா, தற்போது "தொடக்கம்" என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்த "2018" படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
மோகன்லாலின் மகனைப் போலவே மகளும் தனது முதல் படத்திலேயே ஆக்ஷன் அவதாரத்தில் நடித்திருக்கிறார். இவர் "முவாய் தாய்" என்கிற தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றவர் என்பதால், படத்தில் சில அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்ல, மகளுக்காகவும் மோகன்லால் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் ஓணம் பண்டிகை வெளியீடாக ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!