கலை நிகழ்ச்சிக்காக காமெடி நடிகருக்கு மேக்கப் போட்டுவிட்ட மோகன்லால்
ஆக 14, 2026
Advertisement
மலையாளத்தில் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருபவர் கலாபவன் சாஜன். திரிஷ்யம் முதல் பாகத்தில் மோகன்லாலை டார்ச்சர் செய்யும் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், அதன்பிறகு மோகன்லாலுடன் ஒப்பம், லூசிபர், சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 3 உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்தபோது மறதியாக தனது மேக்கப் கிட்டை கொண்டு செல்லாமல் விட்டுவிட்டார் கலாபவன் சாஜன். அந்த சமயத்தில் நிகழ்ச்சிக்கு நேரமாகவே என்ன செய்வது என தவித்துக் கொண்டிருந்த அவருக்கு நீ கவலைப்படாதே மகனே. நான் உனக்கு மேக்கப் போட்டு விடுகிறேன் என்று கூறி மோகன்லாலே தனக்கு மேக்கப் போட்டுள்ளதாக கூறியுள்ளார் கலாபவன் சாஜன்.
“மோகன்லால் சார் தானே முன்வந்து எனக்கு மேக்கப் போட்டது என் வாழ்க்கையில் நான் கனவில் கூட எதிர்பார்க்காத ஒரு விஷயம். சில மறதிகள் நமக்கு மறக்க முடியாத நினைவுகளைத் தரும்” என்று கூறி அது குறித்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!