மஞ்சு வாரியாருக்கு மம்முட்டி அளித்த பொக்கிஷம்
மார் 28, 2021
Advertisement
சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி-மஞ்சு வாரியர் முதன்முதலாக இணைந்து நடித்த "தி பிரைஸ்ட்" என்கிற படம் வெளியானது. மஞ்சு வாரியார் சினிமாவில் நுழைந்த இந்த 25 வருடங்களில் மம்முட்டியுடன் ஒரு படம் கூட நடித்ததில்லை, அவருக்கும் மம்முட்டிக்கும் ஏதோ கருத்து வேறுபாடு என்று சொல்லப்பட்ட வதந்திகளை இதன்மூலம் இருவருமே உடைத்தனர். அதுமட்டுமல்ல இப்போதும் தனது முன்னாள் கணவர் திலீப்பின் ஆதரவாளராகவே மம்முட்டி காணப்பட்டாலும், அதை மனதில் கொள்ளாமல் அவருடன் சகஜமாகவே பழகியுள்ளார் மஞ்சு வாரியார்.
இதுபற்றி எல்லாம் ஏற்கனவே சில பேட்டிகளில் கூறியுள்ள மஞ்சு வாரியர், அதை உறுதிப்படுத்தும் விதமாக, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை தற்போது பகிர்ந்துள்ளார். ஆனால் “இந்த புகைப்படங்களை எல்லாம் எடுத்தது, சாட்சாத் மலையாள சினிமாவின் சிறந்த புகைப்பட கலைஞராகிய மம்முட்டி தான்.. இந்த புகைப்படங்கள் அனைத்தும் எனது பொக்கிஷம்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…