சர்வானந்த்துக்கு ஜோடியாக நடிக்கும் மானசா வாரணாசி
ஆக 25, 2026
Advertisement
தெலுங்கில் 2024-ல் வெளியான "தேவகி நந்தனா வசுதேவா" படத்தில் அறிமுகமான மானசா வாரணாசி, முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து பிரபலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான "கபுள் பிரண்ட்லி" படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்ததாக தெலுங்கில் சர்வானந்த்துக்கு ஜோடியாகப் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் மானசா வாரணாசி.
பிரபல இயக்குநர் சீனு வைட்லா இயக்குகிறார். உறவுகள் மற்றும் ரொமான்ஸுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படத்தில், நவீன சிந்தனைகளுடன் கூடிய, அதேசமயம் பாரம்பரிய குடும்பப் பண்புகளையும் மதிக்கக்கூடிய ஒரு சமகாலத்துப் பெண் கதாபாத்திரத்தில் மானசா வாரணாசி நடிக்கிறாராம். வரும் 2027 சங்கராந்திப் பண்டிகையில் இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!