88 கோடி வசூல் கடந்த லெனின் : முதல் அதிக வசூல் பெற்ற அகில்
ஜூலை 22, 2026
நாகார்ஜுனா, அமலா ஆகியோரது ஒரே மகன் அகில். தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த 10 வருடங்களில் 6 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதில் 2021ல் வெளிவந்த "மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்" படம்தான் அவருக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அப்படம் 50 கோடி வசூலைப் பெற்றது. அதற்கு முன்பு வெளிவந்த நான்கு படங்கள் வெற்றி பெறவில்லை. அகில் நடித்து கடைசியாக 2023ல் வெளிவந்த "ஏஜன்ட்" படமும் தோல்வியைத் தான் தழுவியது.
அகில் நடித்த "லெனின்" படம் கடந்த ஜூலை 10ம் தேதி வெளியானது. இரண்டு நாட்கள் முன்பு வரை 88 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அகில் நடித்து வந்த படங்களில் அதிக வசூலைக் குவித்துள்ள படமாக தற்போது அமைந்துள்ளது. 100 கோடியைத் தொட இன்னும் 12 கோடி தேவை. அடுத்த சில வாரங்களுக்குத் தெலுங்கில் பெரிய போட்டி தரும் வெளியீடுகள் எதுவும் இல்லை. அதனால், எப்படியாவது சமாளித்து 100 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது.
இத்தனை நாட்களாக இப்படி ஒரு வெற்றிக்காக ஏங்கியிருந்த நாகார்ஜுனா குடும்பத்தினர் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!