ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் ‛கிங் ஆப் கோதா
ஆக 01, 2023
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி, வெளியீட்டிற்கு தயாராகி உள்ள படம் ‛கிங் ஆப் கோதா". துல்கர் சல்மான் நடித்த படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் அபிலாஷ் ஜோஷி. இவர் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் ஆவார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார்.
நடிகர் துல்கர் சல்மானை பொறுத்தவரை தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் பிரபலமாகியுள்ளார். இதனால் கிங் ஆப் கோதா திரைப்படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!