நட்சத்திர வாரிசுகளை தேடிச்செல்லும் ‛கல்கி புஜ்ஜி கிப்ட்
ஜூன் 05, 2024
Advertisement
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது "கல்கி 2898 ஏடி". இந்த படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க கதாநாயகிகளாக தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதை தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் பிரபாஸின் நண்பனாக படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் புஜ்ஜி என்கிற கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கும் வந்த இந்த புஜ்ஜி கார் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து இன்னும் இந்த புஜ்ஜி காரை புரோமோட் பண்ணும் விதமாக கல்கி படக்குழுவினர் இந்த கார் போன்ற ஒரு பொம்மை கார் மற்றும் சில கிராபிக்ஸ் அட்டைகள், ஸ்டிக்கர்கள் ஆகியவை அடங்கிய கிப்ட் பார்சலை உருவாக்கி அவற்றை மகேஷ்பாபுவின் மகள் சிதாரா மற்றும் ராம்சரணின் மகள் கிலின் காரா ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்படி இந்த புஜ்ஜி கார் நட்சத்திர குழந்தைகளின் வீடு தேடிச் சென்ற தகவலும் அதுகுறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இன்னும் சில நட்சத்திர குழந்தைகளை இந்த புஜ்ஜி கிப்ட் தேடிச்செல்ல இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…