
துல்கர் சல்மான் பட டிரைலரை வெளியிட்டு ஜூனியர் என்.டி.ஆர் வாழ்த்து
இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதன் தெலுங்கு பதிப்பின் டிரைலரை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டிரைலரின் அதிரடியான வைப் மிகவும் பிடித்திருக்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக இருக்கும் வகையிலும் உள்ளது. எனது சகோதரர் துல்கர் சல்மான் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான ஒன்றை தந்துள்ளார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பந்தயம் மிகப்பெரிய வெற்றியை பெறட்டும்" என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!