சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் குஞ்சாக்கோ போபன் ஜோடியான ஜெய்பீம் நாயகி.
மே 23, 2026
Advertisement
ஜெய்பீம், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லிஜோமோல் ஜோஸ். இந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் வெளியான பேபி கேர்ள் படத்தில் நடித்திருந்த லிஜோமோல் ஜோஸ், சசிகுமாருடன் இணைந்து தமிழிலும் ப்ரீடம் என்கிற படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் சைக்காலஜிக்கல் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள உன்மதம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் லிஜோமோல் ஜோஸ்.
இந்த படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார்.. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் கிடக்கும், அமானுஷ்ய சக்திகள் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு மர்ம வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் குஞ்சாக்கோ போபன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். ரோஷாக், ரோமாஞ்சம் உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய கிரண் தாஸ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!