இருமுடி ; ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது : ஜி.வி.பிரகாஷ்
ஆக 17, 2026
Advertisement
சிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் இருமுடி. இப்படம் டோலிவுட்டின் அடுத்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றாகும். உணர்ச்சிபூர்வமான ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இதில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டுக்கு முந்தைய விழாவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த, மல்லி பூ பல்லகி பாடல் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த பாடல் டிராக் பாடகரின் குரலில் இருந்ததால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இருப்பினும், திரையரங்குகளில் இப்பாடலின் டிஜே வெர்ஷன் மற்றும் பல ஆச்சரியமான மாற்றங்கள் இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தற்போது ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதுடன், திரையரங்க பதிப்பில் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வெளியான விளம்பர வீடியோக்கள் படத்திற்கான நல்ல வரவேற்பை உருவாக்கியுள்ளன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இருமுடி படம் ஆகஸ்ட் 21ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!