
ஜீவா பட வெற்றியைத் தொடர்ந்து மம்முட்டியை இயக்கும் இயக்குனர்
இந்தப் படத்தில் மம்முட்டி ஒரு உள்ளூர் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேரள - தமிழ்நாடு எல்லைப் பகுதியை பின்னணியாகக் கொண்டு இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான அம்சம், "ராஜமாணிக்கம்" படத்திற்குப் பிறகு மம்முட்டி இதில் மீண்டும் திருவனந்தபுரம் பாஷை பேசி நடிக்க இருக்கிறாராம். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் கதாநாயகிகள் என யாரும் இடம் பெற மாட்டார்கள் என்றும், ஒன்பது வயது சிறுமி ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்இயக்குனரின் முதல்படம் falimy... அதாவது family... ல் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.... அருமையான படம் climax twist எதிர்பாராதது...