
திரிஷ்யம் நடிகையின் புகாரை ஏற்று நடிகர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சங்கத்தில் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக காமெடி நடிகர் டினி டாம் நடந்து கொண்டதாகவும், தனக்கு எதிராக மத ரீதியிலான மற்றும் அவதூறான கருத்துக்களை பரப்பி தன்னை ஜிகாதி என்று அழைத்ததாகவும் கூறி அன்சிபா சில வாரங்களுக்கு முன்பு கடவந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், இரு தரப்பினரிடமும் வாக்குமூலம் பெற்றாலும் வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்சிபா, எர்ணாகுளம் ஜூடிசியல் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் டினி டாம் மீது வழக்கு பதிவு செய்து முறைப்படி விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!