திரிஷ்யம் நடிகையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
ஆக 14, 2026
Advertisement
மலையாள நடிகர் சங்கத் தலைவரான ஸ்வேதா மேனன், நிர்வாகக் குழு மோதல் காரணமாகத் தன் பதவியை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். பின்னர் அரசாங்கம் தற்காலிக குழுவை அமைத்த நிலையில், தன்னுடைய ராஜினாமாவை வாபஸ் பெற்றுவிட்டதாகவும், தற்காலிகக் குழுவை கலைத்து உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தநிலையில் ஏற்கனவே சங்க இணை செயலாளர் பதவியிலிருந்து விலகிய "திரிஷ்யம்" பட நடிகை அன்ஷிபா ஹாசன், ஸ்வேதா மேனனுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த வந்த நிலையில், இந்த வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் தன் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக இவ்வழக்கில் இணைய முயற்சிப்பதாகவும் அவர் சங்கத்தில் இருந்து விலகிவிட்டதால் இவ்வழக்கில் அவரை சேர்க்க கூடாது என்ற ஸ்வேதா மேனன் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அன்சிபாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!