கோடை விடுமுறைக்காக சிக்கிம் பறக்கும் சிரஞ்சீவி - மோகன்பாபு
மார் 17, 2021
Advertisement
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஒருவழியாக கொரட்டாலா சிவா இயக்கத்தில் தான் நடித்து வரும் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதேப்போல நடிகர் மோகன்பாபு தனது மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ள "மொசகல்லு" படத்தை தயாரித்து, புரமோஷன் நிகழ்ச்சிகளையும் நடத்தி விட்டார். வரும் மார்ச்-19ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து சிரஞ்சீவி, மோகன்பாபு இருவரும் கோடை விடுமுறையாக சிக்கிம் கிளம்ப தயாராகி விட்டார்கள். இவர்கள் இருவரையும் ஒருசேர புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. மேலும், “நண்பர்கள் இருவரும் ஒன்றாக கிளம்பிவிட்டார்கள்.. நீங்கள் மட்டும் ஜாலியாக கிளம்புகிறீர்களே, குழந்தைகளாகிய எங்களையும் ஏதாவது ஒருநாள் அழைத்து செல்லக்கூடாதா..?” என ஏக்கத்துடன் கேட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!