விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த பாலிவுட் இசையமைப்பாளர்
மே 23, 2026
Advertisement
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது ரணபலி மற்றும் ரவுடி ஜனார்த்தனா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ரவுடி ஜனார்த்தனா படத்தை இயக்குனர் ரவிகிரண் கோலா இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். 1980 களின் பின்னணியில் இதன் கதை அமைந்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக ஏற்கனவே பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மலையாள இசையமைப்பாளர் கிறிஸ்டோபர் சேவியர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது பாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான விஷால் மிஸ்ரா என்பவர் ரவுடி ஜனார்த்தனா படத்தில் புதிதாக இணைந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இசையமைப்பாளர் கிறிஸ்டோபர் சேவியர் நீக்கப்பட்டாரா அல்லது விலகி விட்டாரா என்கிற சந்தேகம் வேண்டாம். இசைப் பொறுப்பை இரண்டாகப் பிரித்து, படத்தின் விறுவிறுப்பான கிராமப்புற சண்டைக் காட்சிகளுக்கும் கதைக்கும் உயிர் கொடுக்கும் பின்னணி இசையை கிறிஸ்டோபர் சேவியர் கவனித்துக் கொள்வார் என்றும், பாடல்களுக்கான இசைப்பணிகளை விஷால் மிஸ்ரா மேற்கொள்கிறார் என்றும் தகவல் தெரிய வந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!