சினிமா டைட்டிலில் பாரத பெயரை நீக்க வேண்டும் : தணிக்கை குழு உத்தரவு
மார் 06, 2024
Advertisement
மலையாள இயக்குனர் டி.வி.ரஞ்சித் இயக்கி உள்ள படம் "ஒரு பாரத சர்க்கார் உல்பன்னம்". இதில் சுபிஷ் சுதி, ஷெல்லி, கவுரி கிஷன், அஜு வர்கீஸ், வினீத் வாசுதேவ் மற்றும் ஜாபர் இடுக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜ்மல் ஹஸ்புல்லா இசையமைத்துள்ளார். வரும் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு சென்றபோது படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தின் தலைப்பில் உள்ள "பாரத" என்பதை நீக்க வேண்டும், அப்படி நீக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்று கூறிவிட்டார்கள். படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி தயாரிப்பு பாரத என்ற பெயரை நீக்கி படத்தை வெளியிடுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!