
பிரேமலு படத்திற்கு முன்பே உருவான கதை தான் பெத்லகேம் குடும்ப யூனிட்
இந்த நிலையில், படத்தின் இணை எழுத்தாளர் கிரண் ஜோசி இந்த படம் குறித்து கூறும்போது, "பிரேமலு படம் எடுப்பதற்கு முன்பே இந்த யோசனை இயக்குனர் கிரிஷின் மனதில் இருந்தது. படத்தின் டைட்டிலும் அப்போதே முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல, கதாநாயகனாக நிவின்பாலிதான் நடிக்க வேண்டும் என்பது வரை தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகுதான் அவர் பிரேமலு படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நான் ஏற்கனவே மனதில் உருவாக்கி வைத்திருந்த "பெத்லகேம் குடும்ப யூனிட்" படத்தை இயக்க முடிவு செய்தார். தான் நினைத்தது போலவே நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து, தன்னுடைய வெற்றி நாயகியான மமிதா பைஜூவையே இதிலும் கதாநாயகியாக தேர்வு செய்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!