கேரளாவில் ரீ ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் ஹேப்பி
ஜூன் 03, 2026
தெலுங்கு நடிகர்களில் கேரளாவில் அதிக அளவு ரசிகர்களைப் பெற்றிருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது பெயரையே அங்குள்ள ரசிகர்கள் "மல்லு அர்ஜுன்" என்று சொல்லும் அளவிற்கு அவரது படங்கள் அங்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அவரது நடிப்பில் கடந்த 2006ல் தெலுங்கில் "ஹேப்பி" என்கிற படம் வெளியானது. சொல்லப்போனால் கேரளாவில் வெளியான அல்லு அர்ஜுனின் முதல் படமும் இதுதான். அப்போதே மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது.
20 வருடங்கள் கழித்து தற்போது இந்த படம் 4K முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, வரும் ஜூன் 12ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. ஏ. கருணாகரன் இயக்கிய இப்படத்தில் ஜெனிலியா கதாநாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கட்டாய திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிக்குள் நடக்கும் சுவாரசியமான கலாட்டாக்களை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருந்தது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!