திலீப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அஜித் பட இயக்குனரின் மகன்
ஏப் 25, 2026
Advertisement
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 35 வருடங்களாக கமர்சியல் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி, திலீப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கி இருந்தாலும் சுரேஷ்கோபி, ஷாஜி கைலாஷ் காம்பினேஷன் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒன்று. தமிழில் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன், அஜித் நடித்த ஜனா, ஆர்கே நடித்த எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் உருவாகி வரும் வரவு என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஷாஜி கைலாஷ்.
இந்த நிலையில் இவரது மகன் ஜெகன் ஷாஜி கைலாஷ், நடிகர் திலீப் நடிக்கும் அவரது 152 வது படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார், இந்த படத்திற்கு "நீகம்" என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டரும் வெளியாகி உள்ளது. கமர்சியல் அம்சங்கள் கொண்ட திரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!