90 வயது மலையாள தயாரிப்பாளர் காலமானார் ; மணிரத்னத்தின் மலையாள படத்தை தயாரித்தவர்
ஆக 19, 2026
Advertisement
மலையாளத் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜியோ குட்டப்பன் என்கிற என்.ஜி.ஜான், வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது வயது 90. மலையாளத்தில் "ஜியோ சினிமாஸ்" என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் "இனிப்பும் புளிப்பும்", "ஏழாம் கடலின் அக்கறையே", "மீன்", "ஈநாடு", "மினிமோல்" உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ள இவர், பெரும்பாலும் இயக்குனர் ஐ.வி. சசி இயக்கத்தில் தான் அதிக படங்களைத் தயாரித்துள்ளார்.
குறிப்பாக மணிரத்னம் திரையுலகில் கால்பதித்த காலகட்டத்தில் 1984ல் அவரது இரண்டாவது படமாக மோகன்லால் மற்றும் சுகுமாரனை வைத்து மலையாளத்தில் இயக்கிய "உணரு" என்கிற படத்தையும் இவர்தான் தயாரித்தார். இவரது மறைவிற்கு மலையாள திரை உலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!