கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்பு
பிப் 19, 2026
Advertisement
‛ஒரு கிடாயின் கருணை மனு, சத்ய சோதனை" போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் சுரேஷ் சங்கையா. கடந்த 2024ம் ஆண்டு திடீரென உடல்நலப் பிரச்னையால் காலமானார். இவர் இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் "கெணத்த காணோம்". இதில் யோகிபாபு கதை நாயகனாக நடிக்கிறார். மேலும் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
மண் சார்ந்த கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த சமூக இயக்கவியல் மற்றும் நுட்பமான படமாக உருவாகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சுரேஷ் சங்கையா உயிருடன் இருந்தபோதே இப்படம் தயாரிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
‛கண்ணும் கண்ணும்" படத்தில் வடிவேலு அலப்பறை செய்த ‛கெணத்த காணோம்..." காமெடி காட்சி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதை தான் இப்போது இந்த படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!