மீண்டும் ஒரு மலையாள படத்தில் யோகி பாபு
ஆக 01, 2026
Advertisement
நடிகர் யோகி பாபு தமிழில் ஒரு பக்கம் காமெடியனாகவும், இன்னொரு பக்கம் கதையின் நாயகாகவும் பிசியாக நடித்து வருகிறார். அதேசமயம் தமிழைத் தாண்டி அட்லியின் நட்புக்காக ஹிந்தியில் "ஜவான்" திரைப்படத்தில் நடித்தவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான "குருவாயூர் அம்பலநடையில்" படத்தின் மூலம் மலையாளத்திலும் நுழைந்தார். அதில் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே அவர் வந்தாலும் அவரது காமெடி மலையாள ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் தற்போது "ஹரிவராசனம்" என்கிற மலையாளப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் யோகி பாபு. இதில் குணசித்திர நடிகரான ஷைஜு குறூப் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு நடிக்கும் தகவலைக் குறிப்பிட்டு, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, "யோகி பாபுவை எங்கள் குழுவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார் ஷைஜு குறூப்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!