பாரதிராஜா, பாக்யராஜ் விழாவை புறக்கணிக்கும் எழுத்தாளர் சங்கம்
ஆக 05, 2026
Advertisement
சமீபத்தில் அடுத்தடுத்து மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோருக்கு பெப்சி, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கங்கள் இணைந்து நினைவு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழா வருகிற 16ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை முதல்வர் விஜய் துவக்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இந்த விழா நடத்துவதற்கு மற்ற சங்கங்களுடன் தங்கள் சங்கத்தை இணைத்து கொள்ளவில்லை என்று கூறி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் சேரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பெப்சி மற்றும் இயக்குநர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பாரதிராஜா - கே. பாக்யராஜ் நினைவு விழாவில், திரைத்துறைக்கு அடிப்படையான எழுத்தாளர் சங்கத்தை முறையாக அழைக்கவில்லை. திரைப்படங்களின் முதுகெலும்பாக இருக்கும் எழுத்தாளர்களின் நியாயமான உரிமைகளையும், அவர்களின் சங்கத்தையும் தொடர்ந்து ஓரங்கட்டி புறக்கணித்து வருகிறார்கள்.
விழாவில் கலந்து கொள்ள பல வகையில் முயன்றும் எங்களது உணர்வுகள் மதிக்கப் படாததால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. சங்க உறுப்பினர்களின் சுயமரியாதையைக் காக்கும் பொருட்டே இந்த முடிவை எடுத்துள்ளோம். வரும் காலங்களிலாவது தாய் அமைப்பான பெப்சி எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!