
வாரணாசி படத்தின் கதை என்ன?
அதில், உலகளாவிய அளவில் நடைபெறும் ஒரு அதிநவீன ஹைடெக் கதைக்களம். 2027ம் ஆண்டில், சாம்பவி என்ற பிரம்மாண்ட விண்கல் புனித நகரமான வாரணாசி மீது நேரடியாக மோதும் அபாயம் ஏற்பட்டு, உலகிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் உருவாகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் சாகசப் பயணியுமான ருத்ரா, பழமையான ஒரு விண்வெளி அரிய பொருளைக் கண்டெடுப்பதற்காக உலகம் முழுவதும் பயணிக்கும் ஆபத்தான ஒரு பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருடன் துணிச்சலான வரலாற்று ஆய்வாளரும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரருமான மந்தாகினியும் இணைகிறார்.
இவர்களது தேடல் ஆப்பிரிக்காவின் காடுகள், அண்டார்டிகாவின் பனிப்பிரதேசங்கள் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நிலப்பரப்புகள் வழியே விரைந்து செல்லும் ஒரு அதிநவீன அறிவியல் புனைவுக்கதை திரில்லராக மாறுகிறது. இவர்களை தொழில்நுட்பத்தில் வல்லமை படைத்த வில்லனான கும்பன் துரத்துகிறான். எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்தப் பேரழிவைத் தடுப்பதற்கான சாவி, வாரணாசியின் புராண வரலாற்றிற்குள் மறைந்துள்ளது. இது தான் கதை என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!