
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் நேரடி தமிழ்ப் படம் : இயக்குனர் தகவல்
தெலுங்கு தயாரிப்பாளர், தெலுங்கு இயக்குனர் என்பதால் இந்தப் படம் ஒரு தெலுங்குப் படமாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. தனுஷ் நடித்த "வாத்தி" படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கி இருந்தார் வெங்கி. அதனால், இந்த சந்தேகம் இருந்து வந்தது.
அதனால், "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படத்தைத் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்குவதாக முதலில் சிலர் சொன்னார்கள். ஆனால், அதைத் தற்போது தெளிவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி.
"விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படம் தமிழில் மட்டுமே படமாக்கப்பட்டது. தெலுங்கில் அந்தப் படத்தை டப்பிங் செய்துதான் வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளார்.
சூர்யா நடித்த "கருப்பு" படம் 340 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்தப் படத்தையும் அது போல வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு இருக்கிறதாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!