
மலேசியாவில் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ஜூன் 13, 2023
ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம் தாண்டி தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பி.ஆறுமுக குமார் இயக்கி தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த மாதத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழுவினர்கள் அறிவித்தனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தான் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!