
மும்பையில் அட்லி மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்
மார் 21, 2026
Advertisement
விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் அட்லி. இந்த மூன்று படங்களையுமே ஹிட்டாக கொடுத்தார். அதன் பிறகு ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் தனது ஆறாவது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மேலும், ஜவான் படத்திற்கு பிறகு அட்லி மும்பையில் குடியேறிவிட்டார் . இந்த நிலையில் அட்லியின் மனைவி பிரியா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் அட்லி, பிரியா தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் மீர் என்ற ஒரு மகன் இருக்கிறான்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!