ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு
ஜன 23, 2026
Advertisement
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்". பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட "ஜனநாயகன்" படம் தணிக்கை சான்றிதழ் பெறும் விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளது. இதனால் படம் வெளியாகவில்லை. தணிக்கை வாரியத்தை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, பின்னர் ஜனவரி 20க்கு தள்ளி வைத்தது. அதற்குள் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம். அந்த வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு கேட்டுக் கொண்டது உச்ச நீதிமன்றம். ஜனவரி 20ம் தேதி வழக்கு விசாரணை அமர்வு முன்பு மீண்டும் வந்தது. இரு தரப்புக்கும் வாதம் செய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜன., 27ல் இப்பட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அடுத்தவாரம் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!