கன்னடத்தில் மகளை அறிமுகப்படுத்தும் ஊர்வசி: 8 வருடங்களுக்குப் பிறகு தானும் ரீ என்ட்ரி
ஜூலை 31, 2026
Advertisement
நடிகை ஊர்வசி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து பிரபலமானவர். சமீப வருடங்களாகத் தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது 8 வருடங்கள் கழித்து கன்னட திரையுலகில் "புல்லி" (Bully) என்கிற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஊர்வசி.
ஆச்சரியமாக அவரது மகள் தேஜலட்சுமி இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கதாநாயகனாக புவன் பொன்னண்ணா என்பவர் நடிக்கிறார். தாய் - மகன் உறவை மையப்படுத்தி டார்க் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது பெங்களூரில் நடந்து முடிந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!