ஹாலிவுட் ஹீ-மேனுக்கு குரல் கொடுக்கும் உன்னி முகுந்தன்
மே 22, 2026
Advertisement
பாலிவுட்டில் இருந்து வெளியாகும் விலங்குகள் குறித்த அனிமேஷன் படங்கள், அல்லது சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் போன்ற படங்கள் இந்திய மொழிகளில் வெளியாகும்போது அந்தந்த மொழிகளில் உள்ள சில பிரபல நடிகர்கள் அதற்கு குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஹாலிவுட்டில் பேண்டஸி திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள "மாஸ்டர்ஸ் ஆப் தி யுனிவர்ஸ்" என்கிற படத்திற்கு குரல் கொடுப்பதன் மூலம் ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்.
சோனி பிக்சர்ஸ் மற்றும் எம்.ஜி.எம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான ஹீ-மேனுக்கு தான் குரல் கொடுத்துள்ளார் உன்னி முகுந்தன்.. இது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள உன்னி முகுந்தன், "சிறு வயதில் நான் ஆராதித்து வளர்ந்த ஒரு சூப்பர் ஹீரோவுக்கு இன்று மலையாளத்தில் குரல் கொடுப்பதன் மூலம் எனது வாழ்க்கை ஒரு முழு வட்டத்தை அடைந்துள்ளது" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்..

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!